/* */

டிஜிட்டல் கரன்சி, இ-கரன்சி அப்படின்னா என்ன? வாங்க பாக்கலாம்

What is Digital Currency in India -சாதாரண ரூபாயை போன்றே டிஜிட்டல் கரன்சியின் மதிப்பும் இருக்கும். டிஜிட்டல் கரன்சி என்பது வெளியில் புழங்கும் கரன்சியின் மின்னணு வடிவமாகும்.

HIGHLIGHTS

டிஜிட்டல் கரன்சி, இ-கரன்சி அப்படின்னா என்ன? வாங்க பாக்கலாம்
X

What is Digital Currency in India -யு.பி.ஐ தொழில்நுட்பமானது ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில், நமது பொருளாதாரத்தைப் பல வகையிலும் முன்னேற்றம் காணச் செய்தது. இதன் அடுத்தகட்டமாக, இ-கரன்சியை சோதனை அடிப்படையில் நமது மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்திருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, முதல் முறையாக பதவி ஏற்றதில் இருந்தே, கருப்பு பணம் ஓழிக்கவும், கள்ள நோட்டுகளை அகற்றவும் டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவித்து வருகின்றது. அந்த வகையில், இந்த டிஜிட்டல் கரன்சியானது நிச்சயம் முக்கிய பங்கு வகிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தினை வலுப்படுத்த உதவும் எனவும், இந்தியாவில் பண பரிவர்த்தனையை அடுத்த இடத்திற்கு எடுத்து செல்லும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பெரும்பாலான நாடுகளில் டிஜிட்டல் நாணயங்கள் உபயோகத்தில் உள்ளது. இந்த டிஜிட்டல் நாணயங்களில், கிரிப்டோகரன்சி, ஸ்டேபிள் காயின்கள், மூன்றாவது மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் ஆகிய மூன்று வகைகள் உள்ளன.

முதலில் கிரிப்டோகரன்சி, பிட் காயின் போன்றவற்றுக்கும், டிஜிட்டல் ரூபாய்க்கும் வித்தியாசம் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் கிரிப்டோகரன்சி, பிட் காயின் போன்றவற்றுக்கு எந்த நாட்டு அரசும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. ஆனால், டிஜிட்டல் கரன்சி என்பதற்கு இந்திய அரசு பொறுப்பு. ரூபாய் நாட்டின் மதிப்பு மாதிரி தான் டிஜிட்டல் கரன்சியின் மதிப்பும்.

டிஜிட்டல் கரன்சி என்பது வங்கியில் பணம் போட்டு வைப்பது போல் அல்ல, நமது கையில் இருக்கும் பணம் போன்றது. எப்படி நாம் நம் கையில் உள்ள பணத்தை கொடுத்து பொருள் வாங்குகிறோமோ அதே போல் டிஜிட்டல் கரன்சியை கொடுக்க முடியும். இதில் வங்கி பரிவர்த்தனை இருக்காது.

வங்கி பரிவர்த்தனையில் நாம் நமது கணக்கில் இருந்து வேறொருவருக்கு அனுப்பும்போது, நமது வங்கியில் இருந்து வேறொரு வங்கிக்கு பணம் சென்று அதன் பின் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், டிஜிட்டல் கரன்சியில் அந்த நடைமுறை குறையும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 பட்ஜெட்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

டிஜிட்டல் கரன்சி எப்படி இருக்கும்?

தன் டிஜிட்டல் நாணயமான இ-ரூபாய் இரண்டு வடிவங்களைக் கொண்டிருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.

முதலாவது, டோக்கன் அடிப்படையிலும் இரண்டாவது கணக்கு அடிப்படையிலும் இருக்கும்.

டோக்கன் அடிப்படையிலான டிஜிட்டல் நாணயம் என்பது வங்கியின் ரூபாய் நோட்டு போன்றது. அதாவது, இந்த டோக்கனை வைத்திருப்பவர் அதன் மதிப்புக்கு உரிமையாளராக இருப்பார்.

கணக்கு அடிப்படையிலான அமைப்பில் டிஜிட்டல் கரன்சி வைத்திருப்பவர், இருப்பு மற்றும் பரிவர்த்தனைகளின் பதிவுகளை வைத்திருக்க வேண்டும். உண்மையில் இ-ரூபாய், இந்திய ரூபாயின் டிஜிட்டல் பதிப்பாக இருக்கும்.

ரிசர்வ் வங்கியின் மறைமுக மாடலின்படி டிஜிட்டல் நாணயம், எந்தவொரு வங்கி அல்லது சேவை வழங்குனருடனும் இணைக்கப்பட்டுள்ள பணப்பையில் (Wallet) இருக்கும்.

ரிசர்வ் வங்கிக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. முதலில் டிஜிட்டல் ரூபாயை உருவாக்குவது, பின்னர், எந்த தடையும் இல்லாமல் அதை அறிமுகப்படுத்துவது.

ஆஃப்லைனிலும் டிஜிட்டல் ரூபாய் மூலம் பரிவர்த்தனை செய்யக்கூடியவகையில் ஒரு பயன்முறையை உருவாக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விரும்புகிறது. இதன் மூலம் டிஜிட்டல் ரூபாயை மேலும் அதிகமானவர்கள் பயன்படுத்த முடியும்.

இது காகித நாணயத்தை ஒத்தது. சாதாரண ரூபாயை போன்றே இதன் மதிப்பும் இருக்கும். டிஜிட்டல் கரன்சி என்பது வெளியில் புழங்கும் கரன்சியின் மின்னணு வடிவமாகும்.

ரூபாயை போலவே இதுவும் ஏற்றுக்கொள்ளப்படும். நாட்டில் புழக்கும் பணத்தை நிர்வகிப்பதற்கான பெரும் செலவைக் குறைக்க ரிசர்வ் வங்கி விரும்புகிறது. அதாவது, நோட்டுகளை அச்சடித்தல், புழக்கத்தில் விடுதல் மற்றும் விநியோகம் செய்வதற்காக ஆகும் செலவைக் குறைக்க ரிசர்வ் வங்கி விரும்புகிறது.

ரிசர்வ் வங்கி கட்டண முறையின் செயல்திறனை அதிகரிக்க விரும்புகிறது. கூடவே அதில் புதுமைகளையும் புகுத்த விரும்புகிறது. இதன் மூலம், எல்லை கடந்த பணம் செலுத்தும் நடவடிக்கைகளில் புதிய அணுகுமுறை பின்பற்றப்படும்.

  • டிஜிட்டல் கரன்சி என்பது ஒரு மெய்நிகர் கரன்சியாக இருக்கும். அதில் எந்தவித மோசடி ஆபத்தும் இருக்காது. மக்கள் அதை முழு நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம்..

மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் என்பது ஒரு நாட்டின் முக்கிய நாணயத்தின் டிஜிட்டல் வடிவமாகும். டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி கண்காணிப்பதால் ஒவ்வொரு ரூபாய் பரிமாற்றமும் கணக்கில் வரும். இதன் மூலம் மோசடி, ஊழல் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சர்வதேச அளவில் இந்தியாவில் பரிவர்த்தனையை கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரிவர்த்தனைகள் செலவுகளை குறைக்கிறது என்பதால், பணம் அனுப்பும் செலவு குறையும்

  • கூகுள் பே, பேடிஎம் மற்றும் யுபிஐ இ-வாலட்டுகளிலிருந்து டிஜிட்டல் கரன்சி வேறுபடுகிறது. இ-வாலட்டுகளுக்கு வரம்பு உள்ளது. ஆனால் டிஜிட்டல் கரன்சியில் அதிக பணத்தை அங்கு கொண்டு செல்லலாம்.

இருப்பினும், இதில் பாதுகாப்பு அம்சம் குறித்த கவலைகளும் உள்ளன. தவறான எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டால் என்ன செய்வது என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இதனை ரிசர்வ் வங்கி இதன் பிரத்தியேக அம்சங்களை விரைவில் தெளிவுபடுத்தும் என கூறப்படுகிறது.

மேலும், டிஜிட்டல் கரன்சிகள் காலாவதியாவதில்லை. தற்போது, இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை மாற்றுவது சவாலாக உள்ள நிலையில், தற்போது அவை எளிதாகிவிடும். மேலும், பணப் பரிமாற்றத்தை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • நெட் பேங்கிங்கில் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் உண்டு. டிஜிட்டல் கரன்சி முறையில் கட்டணம் வசூலிக்கப்படாது.

முதலில் மொத்த விற்பனையில் இந்த டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டு, பிற்பாடு சில்லறை வர்த்தகத்துக்கு நாடு முழுக்க விரிவுபடுத்தப்படும் என ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் இந்த முன்முயற்சியில் ஒன்பது வங்கிகள் ஈடுபட்டுள்ளன. இந்த டிஜிட்டல் கரன்சியை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி மற்றும் ஹெச்எஸ்பிசி உள்ளிட்ட 9 வங்கிகள் வாயிலாக அறிமுகப்படுத்தப்படுத்துகிறது..

இதன் மூலம்24 மணி நேரமும் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதோடு ரொக்க பணத்தை போல வங்கிகள் அல்லது ஏடிஎம்மில் சென்று பணம் எடுக்க வேண்டியதில்லை. இதற்காக கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

சில்லறை பங்கு வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் நாணய பயன்பாடு, சோதனை அடிப்படையில் ஒரு மாதத்திற்குள் தொடங்கப்படும் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணத்தின் மீதான மக்களின் சார்பு, டிஜிட்டல் நாணயம் மூலம் குறைக்கப்படும். மேலும் சில வழிகளில், மொத்த விற்பனை பரிவர்த்தனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். பரிவர்த்தனை தற்போது ரொக்கம், ரூபாய், காசோலைகள் அல்லது வேறு ஏதேனும் நிதி அமைப்பு மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த டிஜிட்டல் கரன்சியை அரசு பத்திரங்கள், பங்கு சந்தை பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நாட்டில் நிதி ஒருங்கிணைப்பு, பண பட்டுவாடா முறையை ஒழுங்குப்படுத்துதல் மற்றும் திறமையாக கையாளுதல் உள்ளிட்ட நிர்வாக வசதிக்காக இந்த டிஜிட்டல் கரன்சிகள் வெளியிடப்பட உள்ளன.

முன்னதாக, இது தொடர்பாக அக்டோபர் மாத தொடக்கத்தில் மத்திய அரசு ஏற்கனவே விரிவான ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆஃப்லைன் அம்சம் காரணமாக மின்சாரம் மற்றும் மொபைல் நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் டிஜிட்டல் கரன்சி வேலை செய்யும்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 6:03 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்