/* */

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டண கால அவகாசம் தேவை இருக்காது. அமைச்சர்

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டண கால அவகாசம் தேவை இருக்காது. அமைச்சர்
X

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தேவைப் படாது என நினைக்கின்றேன் மேலும் அப்படி தேவைப்பட்டால் அது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்

கரூரில் தமிழக அரசின் நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான பொருட்கள் மற்றும் நிவாரண உதவி தொகை ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது மேலும் தனியார் நிறுவனங்கள் அரசு ஊழியர்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்சமயம் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தேவையில்லை என நினைக்கின்றேன். கால அவகாசம் தேவை என்றால் அது குறித்து முதல்வர் முதலமைச்சர் அறிவிப்பார். மேலும் கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அதிமுக ஆட்சியில் கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் இருந்தபோது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அப்பொழுது பாமக தலைவர் ராமதாஸ் அதுகுறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதேபோல பாஜகவினரும் இப்பொழுது டாஸ்மாக் கடைகளை மூட ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர் அவர்கள் முதலில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கட்டும். பிற மாநலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வருவது, கள்ளச் சாராயம் போன்றவற்றை தடுக்க, 27;மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

Updated On: 15 Jun 2021 6:07 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!