/* */

கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அதில் என்ன ரிஸ்க் இருக்கு? வாங்க பாக்கலாம்

Crypto Meaning in Tamil-கிரிப்டோ நாணயம் என்பது டிஜிட்டல் நாணயம். தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட நாணயம், மெய்நிகர் பணம், பாதுகாப்பு குறியாக்கம் செய்யப்பட்ட பணம்

HIGHLIGHTS

Cryptocurrency in Tamil
X

Cryptocurrency in Tamil

Crypto Meaning in Tamil-2009ல் சடோஷி நகமோடோ என்பவர் பிட்காயின் என்ற க்ரிப்டோ கரன்சியை உருவாக்கினார். இந்த பிட்காயினுக்குப் பிறகு பல கிரிப்டோகரென்சிகள் உருவாகி விட்டன.

பொதுவாக நாம் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ வாங்கும்போது, அதற்கான பணத்தை நம் கையில் இருக்கும் ருபாய் நோட்டுகளாக கொடுப்போம். கிரிப்டோ கரன்சிகளும் அதே போல தான், கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தி ஒரு பொருளையோ, சேவையையோ வாங்க முடியும். ஆனால் அவை தொட்டு பார்க்க முடியாத டிஜிட்டல் வடிவில் கரன்சிகளாக இருக்கும்.

  • ஒரு நாட்டின் கரன்சியானது அந்த நாட்டில் மட்டுமே செல்லத்தக்கது ஆகும். ஆனால் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் உலகம் முழுவதும் செல்லத்தக்கது ஆகும்.
  • ஒவ்வொரு நாட்டின் பணத்தையும் அந்த நாட்டின் ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்துகிறது. ஆனால் கிரிப்டோ கரன்சியை எந்த ஒரு வங்கியோ, நாடோ கட்டுப்படுத்த முடியாது.
  • ஒரு இணைய இணைப்பு இருந்தாலே கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
  • கிரிப்டோ கரன்சி என்றால் டிஜிட்டல் நாணயங்கள். கிரிப்டோ கரன்சிகளை கள்ளத்தனமாக போலியாக உருவாக்க முடியாது. ஒவ்வொரு கிரிப்டோ கரன்சிக்கும் குறிப்பிட்ட மதிப்பு உண்டு. மார்க்கெட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பும் ஏறி இறங்கும்.
  • கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்தி பொருட்கள் அல்லது சேவைகளையும் வாங்கிக்கொள்ளலாம். பல்வேறு நிறுவனங்கள் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை ஏற்கத் தொடங்கியிருக்கின்றன. கிரிப்டோ கரன்சிகள் மையப்படுத்தப்படாதவை. அதாவது, கிரிப்டோ காயின்களை எந்தவொரு நிறுவனமும் கட்டுப்படுத்துவதில்லை.

பிளாக்செயின் நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் கிரிப்டோ கரன்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, இதில் வெள்ளிப்படைத்தன்மை அதிகம். மேலும், எந்தவொரு அரசின் தலையீடும் கிரிப்டோ கரன்சிகளில் கிடையாது. இதுபோக, கிரிப்டோ கரன்சிகளுக்கு எல்லைகள் கிடையாது.

கிரிப்டோ கரன்சிகளை எவ்வாறு சேமிப்பது?

பொதுவாக நாம் யாருக்காவது பணத்தை அனுப்ப வேண்டுமென்றால், அவர்களுடைய வங்கிக்கணக்கு எண்ணை கொண்டு பணத்தை அனுப்புவோம். அதே போன்று நாம் பணத்தை பெறுவதற்கு நமக்கும் ஒரு வங்கிக்கணக்கு எண் இருக்கும். வங்கிகள் வழங்கும் மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் நாம் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வோம்.

அதே போன்று கிரிப்டோ கரன்சிகளை சேமிக்க மற்றும் பரிவர்த்தனைகளை செய்ய கிரிப்டோ வாலட்கள் (Crypto Wallets) தேவைப்படுகின்றன. ஒவ்வொரு வாலட்டுக்கும் ஒரு தனித்துவ வாலட் முகவரி (Wallet Address) இருக்கும். இந்த Crypto Wallet Address மூலம் கிரிப்டோ கரன்சிகளை அனுப்பவும், பெறவும் முடியும்.

ஒவ்வொரு கிரிப்டோ கரன்சிக்கும் ஒரு தனி கிரிப்டோ வாலட் தேவைப்படும். உதாரணமாக, பிட்காயின்களை பெறுவதற்கும், அனுப்புவதற்கும் பிட்காயின் வாலட்டும், எத்திரியம் காயின்களை பெறுவதற்கு, அனுப்புவதற்கும் எத்திரியம் வாலட்டும் தேவைப்படும்.

நமது வங்கிக்கணக்கு எண்களை நினைவில் கொள்வது மிகவும் எளிது. ஏனெனில் அவை சில எண்களை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் கிரிப்டோ வாலட்களை நினைவில் கொள்வது மிகவும் கடினம் ஆகும். கிரிப்டோ வாலட்கள் 14 முதல் 74 எழுத்துக்களை கொண்டிருக்கும்.

கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் வடிவிலான எக்சேஞ்ச். இங்கு கிரிப்டோ காயின்களை வைத்திருப்பவர்களின் விவரம் பாதுகாக்கப்படும். இந்த க்ரிப்டோ காயின்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். புதிதாக காயின்களை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது. இந்த காயின்கள் தங்கம், டாலர்கள் போன்ற எதையும் அடிப்படையாகக் கொண்டவையல்ல.

கிரிப்டோகரன்சியில் உள்ள ஆபத்துகள்

இந்த பிட்காயின்களுக்கு மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என்று எதுவும் கிடையாது. புதிய பிட்காயின்கள் ஒரு ஒருங்கிணைந்த முடிவின்படியே உருவாக்கப்படும்.

ஆனால், உலக நாடுகள் இந்த கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையை ஏற்பதில்லை. முதன் முதலாக இந்த ஆண்டு ஜூன் மாதம் எல்சல்வடார் பிட்காயினை சட்டரீதியான பணமாக ஏற்றுக்கொண்டது. அதற்குப் பிறகு ஆகஸ்ட்டில் க்யூபா இதனை ஏற்றது. ஆனால், பிட்காயின் பரிவர்த்தனை பெரிய அளவில் நடைபெறும் சீனா, செப்டம்பர் மாதத்தில் அனைத்து பிட்காயின் பரிவர்த்தனைகளையும் தடைசெய்தது.

இந்தியாவைப் பொருத்தவரை கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளோ அதில் செய்யப்படும் முதலீடுகளோ அரசால் அங்கீகரிக்கப்பட்டவையல்ல. அரசின் எந்த கண்காணிப்பும் அமைப்பும் அதனைக் கண்காணிக்கவில்லை. இதில் முதலீடு செய்பவர்கள் தங்கள் சொந்த ரிஸ்க்கிலேயே முதலீடுகளைச் செய்துவருகிறார்கள்.

கிரிப்டோகரன்சிகளின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை, குறைந்த காலகட்டத்தில் லாபம் சம்பாதிக்க சிறந்த வழி க்ரிப்டோகரன்சிதான் என்கிறார்கள். தவிர, எதிர்காலத்தில் பணவீக்கத்தை இதனால் கட்டுப்படுத்தவும் முடியும் என்கிறார்கள்.

கிரிப்டோகரன்சிகளின் விலை ஏற்றம் இறக்கம் எல்லாம் மிக வேகமாக நிகழும். அதன் பின்னணிகளைச் சாதாரண முதலீட்டாளர் புரிந்துகொள்ளவே முடியாது என்பது இதனை மேலும் சிக்கலாக்குகிறது. உதாரணமாக, 2017ஆம் ஆண்டு ஒரு பிட்காயினின் விலை சுமார் 20,000 டாலராக இருந்தபோது, ஒரே நாளில் திடீரென மூன்றில் ஒரு பங்கு விலை குறைந்தது. 2018ல் இதன் விலை வெறும் 3,122 டாலர் அளவுக்கு வந்தது. கிரிப்டோசந்தையில் இருந்த பல லட்சம் கோடி ரூபாய் காணாமல் போனது.

ஆகவே, ஒரு முதலீட்டாளரைப் பொறுத்தவரை, எந்த அளவுக்கு பணத்தை இழக்கத் தயாராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு மட்டுமே அதில் முதலீடுசெய்ய வேண்டும் என ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

ஆனால், முதலீட்டாளர்கள் கவனம் கொள்ள வேண்டியது, கிரிப்டோகரன்சி விளம்பரங்களின் கீழே சிறிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகத்தைத்தான். "க்ரிப்டோகரன்சிகள் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத டிஜிட்டல் சொத்துகள். சட்டபூர்வமாக எங்கும் பரிவர்ததனை செய்யத்தக்கதல்ல. கடந்தகால செயல்திறன் வருங்கால பலன்களுக்கு உத்தரவாதம் ஆகாது. முதலீடு செய்வதற்கு முன் கவனமாக இருங்கள்" என்கிறது அவ்வாசகம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 April 2024 10:09 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?