/* */

இலங்கைத் தமிழர்களிடம் கடலோர காவல்படை தீவிர விசாரணை

தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களிடம் கடலோர காவல்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

இலங்கைத் தமிழர்களிடம் கடலோர காவல்படை தீவிர விசாரணை
X

தமிழகத்தின் தென்கோடி பகுதியான தனுஷ்கோடி.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இதனால் வாழ வழியில்லாமல், இலங்கைத் தமிழர்கள் பலர் அங்கிருந்து தமிழகத்தில் தஞ்சம் அடைய தொடங்கியுள்ளனர்.

சிறிய படகுகள் மூலமாக தங்களது குடும்பத்தினரோடு தமிழகத்திற்கு அகதிகளாக வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஒரு சில மாதங்களில் இதுவரை 23 குடும்பங்களைச் சேர்ந்த 83 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை இலங்கை வவுனியா பகுதியில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர். தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களிடம் கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தினர். இதனால், பரபரப்பி நிலவியது.

இதையடுத்து, உரிய நடைமுறைகளை பின்பற்றி, அதன்பின்னர், இலங்கை தமிழர்களை அகதிகள் முகாமிற்கு கூட்டிச்சென்று தங்க வைக்கப்படுவர் என, கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தர்.

Updated On: 21 Jun 2022 12:41 PM GMT

Related News