ஜூன் மாதத்தில் அறிமுகமாக உள்ள கார்கள்

இந்த மாதத்தின் இறுதிக்குள் ஆறு புதிய கார்கள் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஜூன் மாதத்தில் அறிமுகமாக உள்ள கார்கள்
X

நாட்டின் பல்வறு பகுதிகளில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டதால், பல புதிய கார்களின் அறிமுக தேதி ஒத்தி வைக்கப்பட்டது. அந்தவகையில், இந்த மாதத்தின் இறுதிக்குள் ஆறு புதிய கார்கள் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஸ்கோடா குஷாக்


மிக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக ஸ்கோடா குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் இருக்கின்றது. முந்தைய மாடல்களைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பு வசதிகள் மற்றும் கவர்ச்சியான ஸ்டைல் உள்ளிட்டவை இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.புதிய ஸ்கோடா குஷாக் கார் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இது ரூ. 10 லட்சம் தொடங்கி ரூ. 18 லட்சம் வரை இருக்கலாம்.

ஹூண்டாய் அல்கஸார்


ஹூண்டாய் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த எஸ்யூவி க்ரெட்டாவை போல ஏழு இருக்கைகள் கொண்ட காராக அல்கஸார் விரைவில் அறிமுகமாக உள்ளது.

இரண்டாம் வரிசை இருக்கையின் மத்தியில் கன்சோல் மற்றும் கேப்டைன் இருக்கை பல சிறப்பு வசதிகளுடன் இக்கார் தயாராகி உள்ளது. ஹூண்டாய் அல்கஸார் 2.0 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இரு விதமான எஞ்ஜின்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. இது ரூ. 13 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது

ஸ்கோடா ஆக்டேவியா


ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா மாடலின் நான்காம் தலைமுறை வெர்ஷனையே இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. நான்காம் தலைமுறை ஆக்டேவியாவிற்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்காரின் அறிமுகம் கடந்த மாதமே அரங்கேறியிருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக அந்நிகழ்வு தள்ளி போனது. 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகின்றது ரூ. 20 லட்சம் தொடங்கி ரூ. 30 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான்


ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்தியாவிற்கான புதிய காராக டிகுவான் காரை ஒதுக்கியுள்ளது.

டிகுவான் எஸ்யூவி காரின் முகப்பு பகுதி முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்துடன், காரின் உட்பகுதியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 4மோஷன் ஆல் வீல் டிரைவ் இக்காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது

ஆடி இ-ட்ரான் எஸ்யூவி


ஆடி நிறுவனத்தின் முதல் மின்சார கார் இ-ட்ரான். இந்த கார் ஒற்றை முழுமையான சார்ஜில் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சூப்பர் ரேஞ்ஜ் திறனுக்காக 95kWh லித்தியம் அயன் பேட்டரி இ-ட்ரான் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது


Updated On: 2021-06-09T09:34:52+05:30

Related News

Latest News

 1. இந்தியா
  அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி: துணைநிலை ஆளுநர் தமிழிசை...
 2. சினிமா
  Zee Tamil சீரியல் தொலைக்காட்சி நடிகைகளின் பெயர் பட்டியல்
 3. நாமக்கல்
  ஆனி கிருத்திகையை முன்னிட்டு நாமக்கல் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு
 4. நாமக்கல்
  நாமக்கல் நகராட்சியில் திடக்கழிவு மேலாண் திட்ட விழிப்புணர்வு முகாம்
 5. கோவை மாநகர்
  குழந்தைகளை காக்க பள்ளிக்கூடம் திட்டம்: கோவை எஸ்.பி பத்ரி நாராயணன்...
 6. தமிழ்நாடு
  தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்- சென்னை வானிலை மையம்
 7. கடையநல்லூர்
  கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் வரும் 28ஆம் தேதி மின் தடை
 8. குமாரபாளையம்
  குமாரபாளையம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி
 9. திருச்செங்கோடு
  ஏமப்பள்ளியில் வரும் 28ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
 10. ஈரோடு
  அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் ரூ.1.93 கோடிக்கு பருத்தி ஏலம்