/* */

ஒற்றை நெல் நாற்று நடவு முறை: விவசாயிகளுக்கு செலவு குறைவு மகசூல் அதிகம்

குறைந்த பொருள் செலவும் நீர்த்தேவையும் கொண்ட ஒற்றை நெல் நாற்று நடவு சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் பெறவேண்டும்

HIGHLIGHTS

ஒற்றை நெல் நாற்று நடவு முறை:  விவசாயிகளுக்கு செலவு குறைவு மகசூல் அதிகம்
X

ஒற்றை நெல் நாற்று நடவு தொழில் நுட்பத்தின் மூலம் நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுகள்

செலவைக் குறைக்கும் ஒற்றை நெல் நாற்று நடவு முறை: விவசாயிகள் விழிப்புணர்ச்சி பெறுவார்களா...?

குறைந்த பொருள் செலவும் நீர்த்தேவையும் கொண்ட ஒற்றை நெல் நாற்று நடவு சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் பெறவேண்டுமென வேளாண் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உலகம் மூன்று பங்கு கடல் நீரால் சுழப்பட்டிருந்தாலும், அந்த நீரை விவசாயத்துக்கோ, குடிநீருக்கோ பயன்படுத்த இயலாது என்பதால் கால் பங்கு நிலப்பரப்பில் பரவிக்கிடக்கும் பனிமலைகள் குளிர்ச்சியையும், பூமி இன்னும் நெருப்பு பந்துதான் என்பதை எரிமலைகளும் நமக்கு உணர்த்தி வருகின்றன. இச்சூழலில், மனிதனின் உணவுத்தேவையானது பல்வேறு வகையான உணவு பொருள்களின் சாகுபடி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால், அதில் தன்னிறைவு அடைந்து விட்டோமா என்றால், இதுவரை இல்லை என்பதை அழுத்தமான பதிலாகக் கூறமுடியும்.

பண்டைய காலத்தில் விவசாயம் என்றால் என்ன என்பதே தெரியாத மனிதர்கள் காடுகளில் தானாக விளைந்த பொருள்களை உணவாகப்பயன்படுத்தினர். அதைத் தொடர்ந்து, அவர்கள் சிந்திய உணவுப்பொருகளின் எச்சங்கள் மண்ணில் மீண்டும் பயிராக விளைந்ததை வினோதமாகப் பார்த்தனர். பரிணாம வளர்ச்சியால் நாளடைவில் மண்ணில் உணவு தானியங்கள் விதைக்கும் முறையைக் கண்டறிந்தனர். இதிலிருந்துதான் பயிர் சாகுபடி என்ற தொழில் நுட்பம் உருவானது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நவீன விவசாய சாகுபடி முறைகள் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. ஓராண்டு வரை வயதுள்ள நெல்பயிர் உள்ளிட்ட உணவு தானியங்கள் 100 நாள்களில் விளையும் புதிய ரகங்கள் வந்தன. இதனால், நாட்டின் உணவுத்தேவையை உள்நாட்டிலேயோ ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உருவானது. இதைத்தான் பசுமைப்புரட்சி என்றனர். இதன் மூலம் 1960 லிருந்து 1985 வரை நாட்டின் உணவு உற்பத்தியின் பரப்பளவு அதிகரிக்கப் பட்டது. வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அளித்து பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், விவசாயத்துடன் தொழில் நுட்பத்துறையிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற முடிவின்படி புதிய பொருளாதாரக் கொள்கை 1990 களில் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு நாட்டுக்குள் நுழைந்தன. இதன் காரணமாக மனித வளம் அதிகமுள்ள நம் நாட்டில் வேலை வாய்ப்பு பெறும் வாய்ப்பு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு கிடைத்தது. அரசும் நாடு முழுவதும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க தீர்மானித்ததன் விளைவாக ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, தொழில்மையங்களாக மாறின. இதன் காரணமாக விவசாயப் பரப்பு சுருங்கிப்போனதுடன், உணவு உற்பத்தியிலும் பின்னடைவு ஏற்பட்டதால் உணவு தானியங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையும் உருவானது.

இந்நிலையில், பருவ நிலை மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாக கிடைத்து வந்த பருவ மழையின் அளவும் குறைந்து போனது. இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசானது. விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை உருவானது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இல்லை என்ற நிலையில், வரும் ஆண்டுகளில் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்ற தங்கள் கவலையை அரசிடம் வேளாண் ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, வேளாண்துறையினர் நெல் பயிர் சாகுபடியில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை இறக்குமதி செய்து விவசாயிகளிடம் அறிமுகம் செய்ய தலைப்பட்டனர்.அதில், குறைந்த பொருள் செலவும், நீர்த்தேவையும், புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய ஒற்றை நெல் நாற்று சாகுபடி முறை முக்கியமானதாக கருதப்படுகிறது. இதை, விவசாயிகளின் வரப்பபிரசாதம் என்றே குறிப்பிடலாம்.

இந்த முறை, கடந்த 1960 -களில் மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஹென்றி டி லலானோ என்பவர் எஸ்.ஆர்.ஐ என்ற செம்மை நெல் சாகுபடி முறையை கண்டுபிடித்தார். இது அந்நாட்டின் நடைமுறை ஆராய்ச்சிகளுக்கு அப்பால் உருவாக சாகுபடி முறையாகும். அந்நாட்டில் ஏழை நெல் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டு மென்றல் குறைந்த இடுபொருள் செலவில், நெல் உற்பத்தித்திறனை உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளோடு தொண்டாற்றிய பாதிரியார் சுமார் 30 ஆண்டுகள் நுணுக்கமாகக் கவனித்து, உழைத்து உருவாக்கியதுதான் இந்த ஒற்றை நெல் நாற்று சாகுபடி முறை.

நடைமுறை நெல் சாகுபடி முறையிலிருந்து மாறுபட்ட உழவியல் முறைகள் இதில் கடைபிடிக்கப்படுகின்றன. நாற்றுத்தயாரித்தல், நடுதல், களைக்கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் போன்ற பொதுவான வழிமுறை இதில் இருந்தாலும், ஒவ்வொரு முறையிலும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கடைபிடிக்க வேண்டும். இந்த மாறுபட்ட வழிமுறைகளைக் கடைபிடித்தால் நெல் செடி வளரும் சூழ்நிலை சாதமாக மாறுகிறது. வேர்கள் நன்றாக வளர்வதால் மொத்த பயிர் வளர்ச்சி மேம்பட்டு மகசூலும் அதிகரிக்கிறது.

1999 -ம் ஆண்டு வரை மடகாஸ்கர்நாட்டில் உள்ள விவசாயிகளால் மட்டும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த சாகுபடி முறையை உலகமெங்கும் தெரிய பெருமுயற்சி எடுத்தவர் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நார்மன்அப்ஹாக் ஆவார். ஆட்சியாளர்களையும், அரசு அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் சந்தித்து இவர் மேற்கொண்ட முயற்சியால் இன்று 25 நாடுகளிலும், இந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, திரிபுரா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் ஒற்றை நெல் நாற்று நடவு சாகுபடி முறை அறிமுகமானது. முன்னதாக, ஒற்றை நெல் நாற்று சாகுபடி முறை குறித்த கோட்பாடுகள் கடந்த 2001 -ம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிலைகளில் ஆராய்ச்சிகள் மற்றும் செய்ல் விளக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தொழில் நுட்பங்கள் தமிழக விவசாயிகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது. செம்மை நெல் குறித்த கோட்பாடுகள். தொழில் நுட்பங்கள் மற்றும் பயன்கள் வகுக்கப்பட்டு விவசாயிகளிடம் கொண்டு செல்லப்பட்டது.

தேசிய உணவு பாதுகாப்புத்திட்டம் மூலம் அரிசி, கோதுமை மற்றும் பயறுவரை ஆகிய உணவு தானிய பயிர்களின் உற்பத்தியை 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அதிகரிக்கும் நோக்கில் 2007-08 -ம் ஆண்டில் இந்த சாகுபடி முறை தீவிரப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் சுமார் 7.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் செம்மை நெல் சாகுபடி செய்யப்பட்டது,. இதில், குறைந்த நீராதாரம் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இந்த பரப்பளவு மேலும் அதிகரிப்பது என்பது விவசாயிகளிடையே இது குறித்த விழிப்புணர்வைப் பெறுவதை பொறுத்தே அமையும் என்கின்றனர் வேளாண் ஆர்வலர்கள்.

இது குறித்து இந்திய விவசாயிகள் சங்க தமிழக நிர்வாகி ஜி.எஸ்.தனபதி கூறியது: இந்த சாகுபடி முறையைக் கையாள அனைத்து தொழில் நுட்பங்களும் விவசாயிகளுக்கு இலவசமாக கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஏறத்தாழ 90 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி பரப்பு உள்ள நிலையில், அதில் ஏறத்தாழ 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் ஒற்றை நெல்நாற்று சாகுபடிமுறையை விவசாயிகள் மேற்கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதற்குத் தேவையான உபகரணங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. இவ்வளவு சலுகைகளை அரசு வேறு திட்டங்களுக்கு வழங்கி வருகிறதா என்பது சந்தேகமே. எப்போதும் புதிய தொழில் நுட்ப முறைக்குள் நுழைய யோசிக்கும் விவசாயிகள், குறைந்த மழை பொழி்வுள்ள மாவட்டங்களில் நெல் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட இத்தொழில் நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த முன்வரவேண்டும் என்றார்.

Updated On: 3 May 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்