/* */

குறுவை நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த உரநிர்வாகம்: வேளாண்துறை ஆலோசனை

குறுவை நெல் சாகுபடியாளர்கள் ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தை கடைபிடித்து அதிக மகசூல் பெற்று பயனடையலாம்

HIGHLIGHTS

குறுவை நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த உரநிர்வாகம்: வேளாண்துறை  ஆலோசனை
X

குறுவை நெல்சாகுபடி

குறுவை நெல்சாகுபடியில் ஒருங்கிணைந்த உரநிர்வாகம்: வேளாண்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், குறுவை நெல் சாகுபடியாளர்கள் ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தை கடைபிடித்து அதிக மகசூல் பெற்று பயனடையுமாறு வேளாண் இணை இயக்குநர் (பொ) மெ.சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்ட மேல் உரம் இடும் தருவாயில் உள்ளது. விவசாயிகள் நெல்சாகுபடியின் போது ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தினை கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. அங்கக உரம் ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் அல்லது கம்போஸ்ட்அல்லது 2.5 டன் பசுந்தாள் உரம் – நடவு வயலுக்கு இடவேண்டும். நடவுக்கு முன்னதாக பசுந்தாள் உரபயிர்களை பூப்பூக்கும் முன்மடக்கி உழுதல் வேண்டும்.

நுண்ணுயிர்உரங்கள் :குறுவைப் பருவ நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு 4 கிலோகிராம் நீலப்பச்சைப்பாசி நுண்ணுயிர் உரத்தினை நடவு செய்த 10ம் நாளில்தூவி சீரானஅளவு நீர்கட்டி வளர்த்திடவேண்டும். ஏக்கருக் குஅசோஸ்பைரில்லம் (நெல்) மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்கள் ஒவ்வொன்றிலும் தலாநான்கு பொட்டலங்கள் (800 கிராம்) எடுத்து 10 கிலோ தொழுஉரத்துடன் கலந்து நடவிற்குமுன் சீராகத்தூவி விடவேண்டும்.சூடோமோனாஸ்புளோரசன்ஸ் என்கிற உயிரியல் மருந்தினை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து நடவிற்குமுன் சீராகத் தூவி விடவேண்டும்.

இரசாயனஉரங்கள்:மண்ஆய்வு முடிவுகளின்படி ரசாயன உரங்கள் இடுதல் வேண்டும். மண் பரிசோதனை செய்யாத நிலையில் பொதுப் பரிந்துரையாகக் குறுவைப் பருவத்திற்கு தழைச்சத்து 48 கிலோவும் மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முறையே 16 கிலோவும் இடவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட முழு அளவு மணிச்சத்தைக் கடைசி உழவின்போது அடியுரமாக இடுதல் வேண்டும். தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை அடியுரமாகவும் மேலுரமாகவும் நான்கு முறையாக பிரித்து இடுதல் வேண்டும்.

குறுவைப் பருவத்தில் ஒரு ஏக்கருக்கு 26 கிலோ யூரியா, 6 கிலோ பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் 100 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும்.மேலும் 26 கிலோ யூரியா மற்றும் 6 கிலோ பொட்டாஷ் உரத்தினை தூர்கட்டும்பருவம், தண்டு உருளும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவத்தில் இடவேண்டும்.

Updated On: 15 Sep 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  3. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  4. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  5. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  6. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  8. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  9. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  10. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்