/* */

ஓபிஎஸ் பக்கம் அடிக்குது காற்று.... ஆதரவாளர்கள் குஷியோ குஷி இபிஎஸ் ஆதரவாளர்கள் அப்செட்

ஐகோர்ட் விசாரணை முடியும் வரை அதிமுகவில் ஏற்கனவே இருந்த நிலையிலேயே இருக்கவேண்டும் எனவும் எந்தவித புது மாற்றங்களும் செய்யக்கூடாது எனஉத்தரவிட்டுள்ளதால் இபிஎஸ் தரப்பினர் பெரும் அப்செட்டில் உள்ளனர்.

HIGHLIGHTS

ஓபிஎஸ் பக்கம் அடிக்குது காற்று....  ஆதரவாளர்கள் குஷியோ குஷி    இபிஎஸ் ஆதரவாளர்கள் அப்செட்
X

முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் இருந்த அதிமுக தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இருந்தபோதிலும் எந்த கட்சி என்றாலும் ஒரே தலைமை இருக்கவே்ண்டும். இரு தலைமை இருந்தால் அதிக குழப்பங்களும், கோஷ்டிகளுமாக மாறி பிரச்னைகள் அதிகரிப்பதோடு உட்கட்சி பூசலால் மக்களிடம் உள்ள நம்பிக்கை போய்விடும் என்ற நப்பாசையில் அதிமுகவில் நடந்த பெரும் மாற்றம் தற்போது வரை புகைந்துகொண்டேயிருக்கிறது.

அதிமுகவை தோற்றுவித்தவர் எம்ஜிஆர். இன்று அவர் இல்லாவிட்டாலும் பட்டி தொட்டியெல்லாம் அவர் புகழ் பட்டொளி வீிசிக்கொண்டுதானிருக்கிறது. அதற்கு பிறகு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்று தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து சிறப்பாகவே ஆட்சி செய்தார். திடீரென மறைந்ததால் அதிமுகவிற்கு யார் தலைமை? என்ற பேச்சு அடிபட்டது. இருந்த போதிலும் ஆட்சியில் இருந்தபோதே அவர் மறைந்ததால் ஓபிஎஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர்ராஜினாமா செய்து தர்மயுத்தம் நடத்தினார். பின் சசிகலா தலைமையேற்றார். ஆனால் அதிக சொத்து சேர்த்த வழக்கு காரணமாக திடீரென ஜெயிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டதால் முதல்வர் பதவியை இபிஎஸ்சிடம் விட்டுவிட்டுசென்றார். அதன்பின்னர் மோடி பேச்சு வார்த்தையில் மீண்டும் ஓபிஎஸ் , இபிஎஸ் இணைந்து ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகித்து சட்டசபை தேர்தலை சந்தித்தனர். இருந்தபோதிலும் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததால் அதிமுக பிரதான எதிர்க்கட்சியானது.

ஆட்சியை இழந்தபின்னர் அதிமுகவில் பெரும் சலசலப்பு தோன்றி ஒரே ஒரு தலைமை தான்வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக ஒரு பிரச்னை கிளப்பப்பட்டது. இதற்கு ஓபிஎஸ் ஒத்துக்கொள்ளாததால் மீண்டும் பிளவு ஏற்பட்டது. இரட்டைத் தலைமைதான்வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியது. மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டமானது கடந்தஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதில் ஏக களேபரம் ஆகி ஒற்றைத்தலைமைதான் வேண்டும் என இபிஎஸ் ஆதரவாளர்களின் பெரும் கூச்சல் ஏற்பட்டதால் ஓபிஎஸ் தரப்பினர் அமைதியாக வெளியேறினர்.

பின்னர் மீண்டும் பொதுக்குழுகூட்டம் நடக்கும்போது இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின் ௪ மாதங்களில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. ஓபிஎஸ் மற்றும்அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார் இபிஎஸ். ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களை நீக்குவதாக மாற்று அறிக்கை விட்டார். இரண்டாவது முறை அதிமுக பொதுக்குழு கூடிய போது ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் ராயப்பேட்டையிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர். அங்குள்ள பொருட்களை எல்லாம் எடுத்து சென்றனர். பின்னர் இதுகுறித்து இபிஎஸ் தரப்பு வழக்கு போட்டதன் தீர்ப்பாக அவருக்கே சாவி வழங்கப்பட்டது தனிக்கதை.

அதிமுக இபிஎஸ் தரப்பு போட்ட பொதுக்குழு எந்தவிதத்திலும் செல்லத்தக்கதல்ல என ஓபிஎஸ் தரப்பு சார்பில் இதனை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அதற்கு சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கினை சென்னை ஐகோர்ட்டிற்கு விசாரிக்க அனுப்பியது.

மேலும் அதில் ஐகோர்ட் வழக்கு முடியும் வரை அதிமுகவில் ஏற்கனவே இருந்தது போலவே இருக்கவேண்டும் என்றும் எந்தவித புது மாற்றங்களோ வேறுஎதுவும் யாரும் செய்யக்கூடாது என இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் நாற்பத்திநான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை துவக்கி வைப்பதற்காக இரண்டு நாட்கள் முகாமாக பிரதமர் மோடி சென்னை வந்தார். அப்போது இருவரும் தனித்தனியே சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். ஆனால் இருவருக்கும் வழங்கப்படவில்லை. மோடி வந்தபோது விமான நிலையத்தில் இபிஎஸ் சந்தித்தார். ஆனால் அவருடன் அதிக நேரம் பேசவில்லை மோடி என தெரிகிறது. ஆனால் மறு நாள் அண்ணாபல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மீண்டும் டில்லி திரும்பும்போது ஓபிஎஸ் அவரை சந்தித்தார். அவருடன் நீண்ட நேரம் பேசியதாக தெரிகிறது. இதுபோல் இருவரையும் தனித்தனியே சந்தித்த மோடி என்ன முடிவு சொன்னார்? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஓபிஎஸ் படை குஷி

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்ததை எதிர்த்து வழக்கு போட்ட ஓபிஸ் ஆதரவாளர்களுக்கு ஆதரவளிப்பதுபோல் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவும் வந்துள்ளதால் அதாவது சென்னை ஐகோர்ட் விசாரிக்கும்.,விசாரணைமுடியும் வரை எந்தவித மாற்றங்களும் செய்யக்கூடாது, ஏற்கனவே இருப்பதுபோல்தான் இருக்க வேண்டும் என சொல்லியுள்ளதால் இபிஎஸ் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க இயலாத வகையில் உள்ளார். எந்த அதிரடி மாற்றங்களையும் அவர் விசாரணை முடியும்வரை செய்யமுடியாது. இதனால் ஆதரவு இல்லாதது போல் இருந்த ஓபிஎஸ் தரப்பு மோடியின் சந்திப்பு, மற்றும் சுப்ரீம்கோர்ட் உத்தரவு என இருபெரும் சப்போர்ட்டை பெற்றதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் குஷியில் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில் இபிஎஸ் தரப்பு எந்த வித பேச்சும் பேசாமல் சைலன்டாக உள்ளது.

கிடப்பில் போட்ட பாஜ

அதிமுகவில் ஒற்றை தலைமை என வந்துவிட்டால் பாஜவுக்கு பவர்இல்லாத நிலை வந்துவிடும். இரட்டைத்தலைமை என இருந்தால்தான் பாஜவின் அனைத்துதிட்டங்களும் தமிழகத்தில் நிறைவேற்ற முடியும். ஒற்றைத்தலைமை என வந்துவிட்டால் அதிமுக பாஜவை கண்டுகொள்ளாது என்ற நினைப்பில் மோடி இபிஎஸ்சை புறக்கணிக்கிறாரோ என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். என்னதான் இருந்தாலும் தற்போது எந்த தேர்தலும் இல்லாததால் கொஞ்ச காலம் கழித்து இதனை பார்த்துக்கொள்ளலாம்என மோடி கிடப்பில் போட்டதாகவும் பேசப்படுகிறது. இருந்தாலும் ஐகோர்ட் விசாரணைக்கு பின்னர்தான் அதிமுகவின் எதிர்காலம் என்ன? என்பதை திட்டவட்டமாக கூறமுடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

Updated On: 1 Aug 2022 4:42 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்