/* */

அதிமுக அலுவலக வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு ஓபிஎஸ் க்கு பெரும் பின்னடைவு

EPS Latest News- அதிமுக வின் பொருளாளராக ஓபிஎஸ் இருந்த நிலையில், அவர் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

HIGHLIGHTS

அதிமுக அலுவலக வழக்கில்   ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு    ஓபிஎஸ் க்கு பெரும் பின்னடைவு
X

Chennai HC orders in ADMK office case - அதிமுக அலுவலகத்தின் சாவியை பழனிச்சாமியிடம் ஒப்படைக்க உத்தரவு

EPS Latest News - சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தின் சாவியை, முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி வசம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும்பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை, அவர் தான் அதிமுக கட்சியின் ஒரே பொதுச்செயலாளராக இருந்து வந்தார். அவரது மறைவிற்குப் பிறகு, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே பழனிச்சாமியும் செயல்பட்டு வந்தனர். இந்த இரட்டைத் தலைமை நடைமுறையால், கட்சியால் சிறப்பாக செயல்பட முடிவதில்லை என்ற முணுமுணுப்பு, கட்சி நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை இருந்து வந்தது.

Chennai HC orders in ADMK office case - இந்நிலையில், அதிமுக கட்சியை கைப்பற்றும் விதத்தில்,இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் செயல்படத் துவங்கினர். கட்சியில், ஓபிஎஸ்சைவிட இபிஎஸ்க்கு ஆதரவு பெருகிய நிலையில், வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ்சிற்கு நேரடியாக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

கடந்த 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில், இபிஎஸ் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு, வானகர மண்டபத்தில் நடந்து கொண்டிருக்க, ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகம் வந்தார். அவரது வருகைக்குஇபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கட்சி அலுவலகத்தில் உள்ள பல்வேறு பொருட்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, ஆர்டிஓ தலைமையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

Chennai HC orders in ADMK office case - அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும் பொருட்டு, ஓபிஎஸ் மற்றும் பழனிச்சாமி தரப்பினர் உயர்நீதிமன்றத்தை நாடினர். அந்த மனு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

தீர்ப்பு விபரம் : அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்ட நீதிபதி, கட்சி அலுவலகத்தின் சாவியை, எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டு உள்ளார். அதிமுக அலுவலகத்தில் விரும்பத்தாகத நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு, ஒரு மாத கால அளவிற்கு தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் என்று நீதிபதி சதீஷ்குமார் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னடைவு : அதிமுக கட்சியின் பொருளாளராக பன்னீர்செல்வம் இருந்த நிலையில், அவர் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டு ள்ளார்.அந்த பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இது ஓபிஎஸ்சிற்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு,ஓபிஎஸ் தரப்புக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுவதாலும், இதுவரை இவர் காட்டிய எதிர்ப்பு அனைத்துமே இபிஎஸ்க்கு சாதகமாக அமைந்து வருவதால் அவர் கரம் வலுத்து வரும் நிலையில் அடுத்து என்ன முடிவெடுப்பார் ஓபிஎஸ் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர். .

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 July 2022 4:24 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  4. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  5. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  7. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  8. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  9. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  10. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!